அசாதுத்தீன் உவைசி பாஜகவின் மறைமுக ஆதரவாளர் - சித்து பரபரப்பு தகவல்!

ஏப்ரல் 17, 2019 436

பாட்னா (17 ஏப் 2019): அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஒவைஸி பாஜகவின் மறைமுக ஆதரவாளர் என்று பஞ்சாப் அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்து தெரிவித்துள்ளார்.

பிகாரின் கடிகார் பகுதியில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தாரிக் அன்வருக்கு ஆதரவாக, நவ்ஜோத் சிங் சித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு பேசிய அவர்,

நீங்கள் உங்களை சிறுபான்மையினராகக் கருத வேண்டாம். இந்தத் தொகுதியைப் பொருத்தவரையில் நீங்கள் தான் பெரும்பான்மையினர். எனவே, பாஜகவுக்கு எதிராக வாக்களித்து, மோடியைத் தோற்கடியுங்கள். அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஒவைஸி போன்றவர்களின் பேச்சை நம்ப வேண்டாம். அவர்களை பாஜக மறைமுகமாக ஆதரித்து வருகிறது இவ்வாறு பேசினார்.

சித்துவின் பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சித்துவுக்கு எதிராக போலீசில் தேர்தல் ஆணையம் புகார் அளித்ததுடன் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கும் மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்பியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...