பாஜகவில் இணைந்த மலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி!

ஏப்ரல் 17, 2019 448

போபால் (17 ஏப் 2019): மலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி பிரக்யா சிங் தாக்கூர் பாஜகவில் இணைந்துள்ளார்.

மலேகான் குண்டு வெடிப்பை நடத்தியதாக கைது செய்யப் பட்டு 10 ஆண்டு சிறையில் இருந்த பிரக்யா சிங் தாக்கூர் தற்போது விடுதலை செய்யப் பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் பாஜகவில் இணைந்துள்ளார். மேலும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங்கை எதிர்த்துப் போட்டியிடுவார் என்றும் எதிர் பார்க்கப் படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மலேகானில் கடந்த 2008 செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 6 பேர் உயிரிழந்தமையும், பலர் படுகாயம் அடைந்தமையும் குறிப்பிடத்தகக்து.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...