இம்ரான் கான் பாஜகவை ஆதரிப்பது உண்மையா? - மோடி பதில்!

ஏப்ரல் 17, 2019 305

புதுடெல்லி (17 ஏப் 2019): பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பாஜகவை ஆதரிப்பதுபோல் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மோடியின் பேட்டி ஒன்று பிரபல ஆங்கில நாளிதழில் இன்று வெளியாகியுள்ளது. அதில் மோடியிடம், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிணக்குகள் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தீர்க்கப்படும் என நம்புவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் தெரிவித்த கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, முன்னர் பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலின்போதும் இம்ரான் கான் எனது பெயரை குறிப்பிட்டு அரசியல் ஆதாயத்துக்காக பேசி இருந்தார்

இம்ரான் கான் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர் என்பதை நாம் மறந்துவிட கூடாது. அவர் சமீபத்தில் தெரிவித்த கருத்து, இந்திய தேர்தல்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்த ‘ரிவர்ஸ் ஸ்விங்’ பந்துவீச்சு போன்றதாகும்." என்று மோடி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...