பண மதிப்பிழப்பிற்குப் பிறகு 50 லட்சம் பேர் வேலை இழப்பு!

ஏப்ரல் 17, 2019 231

பெங்களூரு (17 ஏப் 2019): பண மதிப்பிழப்பிற்குப் இந்தியாவில் 50 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் அடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் நாட்டில் சுமார் 50 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டுக்குப் பின்னர் வேலைவாய்ப்பின்மை இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே இருந்துள்ளது.

ஆனால், 2016-ம் ஆண்டுக்குப் பின்னர் இது கடுமையாக உயர்ந்து பலரும் வேலை இன்றி தவிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. ’வொர்க்கிங் இந்தியா 2019’ ( State of Working India (SWI)) என்ற ஆய்வின் அடிப்படையில் இந்தியாவின் சக்தி, பலம் என்றெல்லாம் கருதப்படும் இளைஞர்கள் குறிப்பாக 20 முதல் 24 வரையிலான இளைஞர்கள் அதிகளவில் வேலையில்லாமல் உள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.

ஆண்கள் நிலையைவிட பெண்கள் அதிகளவில் வேலைவாய்ப்பின்மையால் தவிக்கின்றனர் என்கிறது ஆய்வு. தொழிலாளர் புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்திய தொழிலாளர் சந்தை கடந்த மூன்று ஆண்டுகளாகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...