கிராமத்தினரை அச்சமூட்டி மிரட்டி வாக்கு கேட்ட பாஜக தலைவர்!

ஏப்ரல் 18, 2019 377

குஜராத் (18 ஏப் 2019): ஒவ்வொருவர் ஓட்டு போடுவதையும் மோடி கேமரா மூலம் பார்ப்பார் என்று கிராமத்தினரை மிரட்டை பாஜக தலைவர் ஒருவர் வாக்கு கேட்டுள்ளார்.

நாடாளு மன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாஜக உள்ளூர் தலைவர் ரமேஷ் கத்தாரா என்பவர் அந்த கிராம மக்களிடம் வாக்கு கேட்டபோது, அவர்களிடம் , "பிரதமர் மோடி அவரது போனில் எல்லா கேமராவும் வைத்துள்ளார். நீங்கள் ஓட்டு போடுவதை அவர் பார்ப்பார். நீங்கள் பாஜகவுக்கு ஒட்டு போடாமல் வேறு கட்சிக்கு போட்டால் அவர்களை கண்டு பிடித்து அவர்களுக்கு வேலை எதுவும் கொடுக்க மாட்டார். மேலும் அவர்கள் யாரும் வேலை பார்த்துக் கொன்டிருந்தால் அந்த வேலையிலிருந்து நீக்கம் செய்யப் படுவர்" என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

ஏற்கனவே மத்திய அமைச்சர் மேனகா காந்தி உத்திர பிரதேசம் மாநிலத்தில் முஸ்லிம்களை மிரட்டும் வகையில் பேசி வாக்கு கேட்டது குறிப்பிடத்தகது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...