முகேஷ் அம்பானி காங்கிரசுக்கு திடீர் ஆதரவு - வீடியோ!

ஏப்ரல் 19, 2019 639

மும்பை (18 ஏப் 2019): தொழிலதிபர் முகேஷ் அம்பானி காங்கிரஸ் வேட்பாளர் மிலிந்த் தியோராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தென் மும்பையில் சிவசேனா வேட்பாளர் அரவிந்த் சவந்த்தை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் மிலிந்து தியோராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப் பட்டுள்ள வீடியோ ஒன்றில் முகேஷ் அம்பானி மிலிந்து தியோராவுக்கு ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரஃபேல் ஊழல் தொடர்பில் பிரதமர் மோடியையும் அனில் அம்பானியையும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அனில் அம்பானியின் சகோதரர் முகேஷ் அம்பானி காங்கிரஸ் தலைவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...