மோடியின் ஹெலிகாப்டரில் இருந்த பொருளை மக்கள் அறியக் கூடாதா? - காங்கிரஸ் கேள்வி!

ஏப்ரல் 19, 2019 278

புதுடெல்லி (19 ஏப் 2019): பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டரை சோதனை செய்த ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப் பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஒடிசா மாநிலம், சம்பல்பூரில் தேர்தல் பிரச்சாரத்துக்கு பிரதமர் மோடி நேற்று முன்தினம் சென்றிருந்தார். அப்போது, பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஏதேனும் மீறியிருக்கிறதா என்பதை அறிய ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரி முகமது முஹ்சின் சோதனையிட்டார்.

கடந்த 1996-ம் ஆண்டு கர்நாடக ஐஏஎஸ் பேட்ஜைச் சேர்ந்தவர் முகமது முஹ்சின். தேர்தல் அதிகாரியாக சம்பல்பூரில் நியமிக்கப்பட்டிருந்தநிலையில் அவர் மோடியின் ஹெலிகாப்டரை திடீரென சோதனையிட்டார்.

இதையடுத்து தேர்தல் பார்வையாளர் முகமது மோசினை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் முகமது மோசினை சஸ்பெண்ட் செய்ததற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் விதிமுறைகளில் அனைவரும் சமமே அப்படியிருக்க பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனை செய்தது எந்த வகையிலும் தவறாகாது. மோடி பயணிக்கும் ஹெலிகாப்டரில் ரகசிய பெட்டியும் இருப்பதாக உள்ள நிலையில் அதில் என்ன உள்ளது? என்பது குறித்து மக்களுக்கு தெரியப் படுத்த வேண்டும். ரகசியமாக பெட்டிகள் கொண்டு செல்வது தேர்தல் விதிமுறைக்கு எதிரானதாகும். இதன் அடிப்படையில் சோதனை செய்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்தது கண்டிக்கத் தக்கதாகும். என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...