காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி திடீர் ராஜினாமா!

ஏப்ரல் 19, 2019 272

புதுடெல்லி (19 ஏப் 2019): காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் மாற்றப்பட்ட சில கட்சி நிர்வாகிகள் சில தினங்களுக்கு முன், மதுராவில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டமொன்றில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ள நிலையில் தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியுடனான தனது அனைத்து பதவிகளையும் விட்டு விலகுவதாக அறிவித்துள்ள பிரியங்கா சதுர்வேதி. இதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ளார்.

முன்னதாக ட்விட்டர் கணக்கில் உள்ள தனது கட்சி சார்ந்த அறிமுகங்களையும் அவர் மாற்றிக்கொண்டார். விலகுவதற்கு முன் தான் கட்சியில் இருந்த பதவிகள் குறித்த விவரங்களையும் அதில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...