மும்பை தாக்குதலில் வீர மரணம் அடைந்த கர்க்கரே குறித்து சர்ச்சையாக பேசிய குண்டு வெடிப்பு குற்றவாளி சாத்வி பிராக்யா சிங்!

ஏப்ரல் 19, 2019 640

புதுடெல்லி (19 ஏப் 2019): மும்பை பயங்கரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த காவல்துறை அதிகாரி பற்றி ஹேமந்த் கர்க்கரே குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டு சிக்கியுள்ளார் பயங்கரவாதியும் பாஜக வேட்பாளருமான சாத்வி பிரக்யா சிங்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் இருந்து சுமார் 270 கி.மீட்டர் தொலைவில் உள்ள மலேகானில் கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி இரட்டை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சாத்வி பிராக்யா சிங் தாக்கூர் என்ற பெண்ணுக்கு விசாரணை நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. பின்னர், இதே வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட போது சாத்வி பிராக்யா சிங் விடுதலை செய்யப்பட்டார்.

அவர் தற்போது பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதோடு, நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் மத்திய பிரதேசத்தில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் மும்பை பயங்கரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த ஹேமந்த் கர்க்கரே குறித்து சர்ச்சையான கருத்தை வெளியிட்டுள்ளார். அதாவது சாத்வி பிரக்யா சிங்கின் சாபம்தான் அவரை அந்த தாக்குதலில் கொன்று விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

சாத்வி பிரக்யா சிங்கின் இந்த பேச்சு நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவரை எப்படி இப்படையெல்லாம் பேச தோன்றுகிறது? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மலேகான் குண்டு வெடிப்பு உட்பட பல்வேறு இந்துத்வ பயங்கரவாத செயல்களை உலகுக்கு கொண்டு வந்தவர் ஹேமந்த் கர்க்கரே என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...