மோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை!

ஏப்ரல் 20, 2019 223

புதுடெல்லி (20 ஏப் 2019): பிரதமர் மோடியின் வாழ்க்கை பற்றிய மோடி, 'Modi-Journey of a Common Man' என்ற வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து உள்ளது.

நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கிடையில் மீதம் உள்ள தொகுதிகளுக்கான தேர்தலுக்காக அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்ந்து அமலில் உள்ளன.

இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி என்ற பெயரில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் வெளியாக இருந்தது. இதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இந்நிலையில் இன்று 'Modi-Journey of a Common Man' என்ற தலைப்பிலான வலைதள தொடர் ஒன்றுக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்து உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும்பொழுது, எந்தவொரு அரசியல் அல்லது தனிநபருடன் தொடர்புடைய வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட காட்சிகள், தேர்தலில் இடையூறு ஏற்படுத்தும் ஆற்றல் கொண்ட விசயங்கள் எதுவும், மின்னணு ஊடகம் உள்ளிட்டவற்றில் திரையிடப்பட கூடாது.

ஆணையத்தின் இந்த உத்தரவின்படி, நடப்பு மக்களவை தேர்தலில் ஓர் அரசியல் தலைவராக, பிரதமராக, நரேந்திர மோடி பற்றிய இந்த வலைதள தொடரில் உள்ள உண்மைகள் மற்றும் விசயங்களை கவனத்தில் கொண்டு இதற்கு தடை விதிக்கப்படுகிறது என ஆணையம் உத்தரவு பிரப்பித்துள்ளது. இந்த தடையானது அடுத்த உத்தரவு பிறப்பிக்கும்வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...