பாபர் மசூதியை இடித்ததில் எங்களுக்கு பெருமை - பாஜக பயங்கரவாதி பிரக்யா சிங் தாகூர்!

ஏப்ரல் 21, 2019 456

புதுடெல்லி (21 ஏப் 2019): பாபர் மசூதியை இடித்ததில் பெருமை கொள்வதாக பாஜக வேட்பாளரும் பயங்கரவாதியுமான பிரக்யா சிங் தாகூர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் கடந்த 2008 செப்டம்பர் 29-ம்தேதி குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் சாமியார் பிரக்யா சிங் தாகூர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். யு.ஏ.பி.ஏ. சட்டத்தின் பிரிவுகளின்படி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

தற்போது அவர் ஜாமினில் வெளி வந்திருக்கிறார். அவரை மத்திய பிரதேச மாநிலத்தில் போபால் மக்களவை தொகுதியின் வேட்பாளராக பாஜக நிறுத்தியுள்ளது. அவரை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் திக் விஜய் சிங் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரக்யா சிங், ‘பாபர் மசூதியை இடித்ததற்கு நாங்கள் பெருமை கொள்கிறோம். ராமர் கோயிலை சுற்றி குப்பைகள் இருந்தன. அவற்றை நாங்கள் அகற்றினோம்.' என்று தெரிவித்தார்.

தேர்தல் நேரத்தில் அவர் இவ்வாறு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...