மத பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சி - இலங்கை இஸ்லாமிய மன்றம் கண்டனம்!

ஏப்ரல் 22, 2019 519

கொழும்பு (22 ஏப் 2019): இலங்கை பயங்கரவாத குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு இலங்கை இஸ்லாமிய மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கை இஸ்லாமிய மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதம் மற்றும் இன பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல்களுக்கு எங்கள் கண்டனங்களையும், உயிரிழந்தவர்களுக்கு எங்கள் அஞ்சலிகளையும் தெரிவிக்கிறோம். மக்களின் இயல்பு வாழ்க்கையை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது..

இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, கொடிய குற்றங்கள் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் அரசாங்கத்தை கோரி உள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இஸ்லாமிய சமூகத்திற்கு இலங்கை இஸ்லாமிய மன்றம் அழைப்புவிடுத்துள்ளது.

இலங்கையில் இன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவிக்கின்றது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...