இலங்கை குண்டு வெடிப்பில் இந்தியர்கள் ஐந்து பேர் பலி!

ஏப்ரல் 22, 2019 256

கொழும்பு (22 ஏப் 2019): இலங்கை குண்டு வெடிப்பில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளதை இந்திய தூதரகம் உறுதி படுத்தியுள்ளது.

இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, டென்மார்க், ஜப்பான், பாகிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பில், 3 இந்தியர்கள் கொல்லப்பட்டதாக நேற்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று காலை கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள தகவலில், மேலும் 2 இந்தியர்கள் பலியாகி இருப்பதாக தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...