பாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க முடிகிறது - கேரளாவில் வாக்குப் பதிவு நிறுத்தம்!

ஏப்ரல் 23, 2019 766

திருவனந்தபுரம் (23 எப் 2019): கேரளாவில் காங்கிரஸுக்கு வாக்களித்தால் பாஜகவுக்கு செல்வதாக எழுந்த புகாரை அடுத்து அங்குள்ள ஒரு வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

கேரளத்தில் 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவளம் அருகே அமைக்கப்பட்டிருந்த 151-ஆவது வாக்குச் சாவடியில் காங்கிரஸுக்கு வாக்களித்தால் பாஜக சின்னத்தில் விளக்கு எரிவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. இயந்திரத்தை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு எழுந்தது.

இன்று கேரளா உட்பட 14 மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...