குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பல்கீஸ் பானுவுக்கு ரூ 50 லட்சம் நஷ்ட ஈடு - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஏப்ரல் 23, 2019 445

புதுடெல்லி (23 ஏப் 2019): குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு ரூ. 50 லட்சம் வழங்க குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து பெரும் கலவரம் மூண்டது. அதில் முஸ்லிம்கள் 2000க்கும் அதிகமானோர் படுகொலை செய்யப் பட்டனர். இந்த வன்முறை நடைபெற்ற அந்த இரண்டு நாட்களில் அகமதாபாத் நகரில் உள்ள ரந்திக்பூா் கிராமத்தில் பில்கிஸ் பானு என்ற பெண்ணின் குடும்ப உறுப்பினா்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். பில்கிஸ் பானு வன்புணர்ந்து தாக்கப் பட்டார். இதனை அடுத்து அங்கு மயங்கி கிடந்த மில்கிஸ் பானு இறந்து விட்டதாக கருதிய இந்துத்வா வன்முறையாளர்கள் அவரை அங்கேயே விட்டுச் சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு 2008ம் ஆண்டு 11 போ் கைது செய்யப்பட்டனா். ஆனால் போலீஸ் உயரதிகாரிகள் இந்த வழக்கை சரிவர கையாளவில்லை மேலும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டது.. இதையடுத்து மும்பை உயா்நீதிமன்றம் அந்த காவல் அதிகாரிகளையும் குற்றவாளிகள் பட்டியலில் சோ்த்தது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குஜராத் மாநில அரசு 50 லட்சம் ரூபாய் இழப்பீடாக தர வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும் அந்த பெண்ணிற்கு வசிக்க இடமில்லாததால் ஒரு வீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. பில்கிஸ் பானுவின் வழக்கறிஞா் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் 4 போ் ஓய்வு பெற்று விட்டதாகவும், ஒரு ஐபிஎஸ் அதிகாரி மட்டும் பணியில் உள்ளதாகவும், அவா்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று முன்ன தெரிவித்தார்.

இது குறித்து அறிக்கை அளிக்குமாறு குஜராத் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞா் ஓய்வு பெற்ற 4 காவல் துறை அதிகாரிகளின் ஓய்வுதிய பலன்களை நிறுத்தி வைத்திருப்பதாகவும், பணியில் உள்ள ஒரு அதிகாரி பணி இறக்கம் செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

2002 குஜராத் கலவரத்தின்போது தற்போதைய பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...