வழக்கறிஞராக விரும்பும் குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில்கிஸ் பானுவின் மகள்!

ஏப்ரல் 24, 2019 408

புதுடெல்லி (24 ஏப் 2019): குஜராத் கலவரத்தில் பாதிக்கப் பட்ட பில்கீஸ் பானுவின் மகள் வழக்கறிஞராக விரும்புவதாக பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் சோபா தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து பெரும் கலவரம் மூண்டது. அதில் முஸ்லிம்கள் 2000க்கும் அதிகமானோர் படுகொலை செய்யப் பட்டனர். இந்த வன்முறை நடைபெற்ற அந்த இரண்டு நாட்களில் அகமதாபாத் நகரில் உள்ள ரந்திக்பூா் கிராமத்தில் பில்கிஸ் பானு என்ற பெண்ணின் கணவர், மகள் உட்பட குடும்ப உறுப்பினா்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். கப்பிணியான பில்கிஸ் பானு வன்புணர்ந்து தாக்கப் பட்டார். இதனை அடுத்து அங்கு மயங்கி கிடந்த மில்கிஸ் பானு இறந்து விட்டதாக கருதிய இந்துத்வா வன்முறையாளர்கள் அவரை அங்கேயே விட்டுச் சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு 2008ம் ஆண்டு 11 போ் கைது செய்யப்பட்டனா். ஆனால் போலீஸ் உயரதிகாரிகள் இந்த வழக்கை சரிவர கையாளவில்லை. குறிப்பாக குற்றவாளிகளுக்கு சாதகமாக போலீஸ் செயல்பட்டது. இதையடுத்து மும்பை உயா்நீதிமன்றம் அந்த காவல் அதிகாரிகளையும் குற்றவாளிகள் பட்டியலில் சோ்த்தது. இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குஜராத் மாநில அரசு 50 லட்சம் ரூபாய் இழப்பீடாக தர வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த கலவரம் நடந்த போது தற்போதைய பிரதமர் மோடியே அப்போது குஜராத்தின் முதல்வராக இருந்தார்.

இந்நிலையில் அப்போது கர்ப்பிணியாக இருந்த பில்கீஸ் பானுவிற்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது இளம் பெண்ணாக உள்ள அவர் ஒரு வழக்கறிஞராக வர வேண்டும் என்று விரும்புவதாக பில்கிஸ் பானுவிற்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் சோபா தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...