பயங்கரவாதி பிரக்யா சிங் தாகூரை எதிர்த்து முன்னாள் காவல்துறை அதிகரி போட்டி!

ஏப்ரல் 25, 2019 376

புதுடெல்லி (25 ஏப் 2019): மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங்க் தாகூரை எதிர்த்து ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரி போட்டியிடுகிறார்.

பிரக்யா சிங் தாகூர் மத்திய பிரதேசம் போபாலில் பாஜக வேட்பாளராக நிறுத்தப் பட்டுள்ளார். இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல், மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிர் நீத்த பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு உயர் அதிகாரி ஹேமந்த் கர்கரே மரணத்திற்கு நான் இட்ட சாபமே காரணம் என்று கூறி பிரக்யா சிங் மேலும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டார்.

இந்நிலையில் பிரக்யா சிங்க் தாகூருக்கு அதிர்ச்சி தரும் விதமாக முன்னாள் காவல்துறை துணை கமிஷனர் ரியாஸ் தேஸ்முக் பிரக்யா சிங்கை எதிர்த்து போபாலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

ரியாஸ் தேஸ்முக் ஹேமந்த் கர்கரேவின் தலைமையின் கீழ் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...