பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - பிரதமர் மோடி!

ஏப்ரல் 26, 2019 225

வாரணாசி (26 ஏப் 2019): புதிய இந்தியாவில் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் நேற்று (வியாழக்கிழமை) பேரணியொன்று பா.ஜ.க.வினால் நடத்தப்பட்டது. அதில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மோடி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“காசி நகர், நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு மட்டுமன்றி பிரதமராவதற்கும் தனக்கு ஆசி வழங்கியது. மேலும் தீவிரவாதிகளுக்கு ஏற்ற விதத்தில் பதிலடி கொடுக்கவும் காசி நகரம் பெரும் உதவியாக இருந்தது.

அந்தவகையில் புதிய இந்தியாவில், தீவிரவாதத்திற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்பதில் எந்ததொரு சந்தேகமும் இல்லை.

இதேவேளை மக்களின் நலனை மாத்தரமே கருத்திற்கொண்டு பா.ஜ.க எப்போதும் செயற்படும்” என நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...