பிரக்யா சிங் தாகூரின் ரகசியத்தை போட்டுடைத்த டாக்டர்!

ஏப்ரல் 26, 2019 480

புதுடெல்லி (26 ஏப் 2019): கோமியத்தால்தான் பிரக்யா சிங் தாகூரின் புற்று நோயை குணப்படுத்தியது என்ற பரப்புரையில் உண்மை இல்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தெரிவித்துள்ளார்.

மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும், பாஜக சார்பில் போபால் தொகுதியில் போட்டியிடுபவருமான பிரக்யா தாகூர் சில நாட்களுக்கு முன்னர், தனக்கு மார்பக புற்றுநோய் இருந்ததாகவும், மாட்டின் சிறுநீர் பயன்படுத்தியதால் அதன் மருத்துவ குணத்தால் புற்றுநோய் சரியானதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மருத்துவர் ராஜ்புத், "பிரக்யா கடந்த 2008 ஆம் ஆண்டு வாக்கில் ஆரம்பகட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 2012 ஆம் ஆண்டு அவருக்கு அறுவைசிகிச்சை செய்து கட்டி நீக்கப்பட்டது. பிறகு இரண்டாவது அறுவை சிகிச்சை போபாலில், பிறகு 2017 ஆம் ஆண்டு மூன்றாவது அறுவை சிகிச்சை நடந்த போது அவரின் மார்பகங்கள் நீக்கப்பட்டன" என தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...