பாஜக எம்.பிக்களுக்கு தடை!

ஏப்ரல் 27, 2019 345

பெங்களூரு (27 ஏப் 2019): நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை கர்நாடக பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், நேற்று (வெள்ளிக்கிழமை) பெங்களூர் மல்லேசுவரத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது அக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே எடியூரப்பா இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“துமகூரு, கலபுரகி, கோலார் உள்ளிட்ட தொகுதிகளின் கள நிலவரங்களின் அடிப்படையில் பா.ஜ.க வெற்றி பெறுவது உறுதி. இதனை தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது உணர்ந்துகொள்ள முடியும்.

இதேவேளை சிஞ்சோலி, குந்துகோல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. ஆகையால் பா.ஜ.க உறுப்பினர்கள் அந்த தொகுதிகளுக்கு சென்று பணியாற்ற வேண்டும்.

அந்தவகையில் பா.ஜ.க.வின் முழுமையான வெற்றியை இந்த 2 தொகுதிகளுமே தீர்மானிக்கும். ஆகையால் தேர்தல் முடிவு வெளியாகும் வரை யாரும் சுற்றுலா பயணங்களை மேற்கொள்ள வேண்டாம்” என எடியூரப்பா குறிப்பிட்டுள்ளார்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...