விரைவில் வருகிறது புதிய 20 ரூபாய் நோட்டு!

ஏப்ரல் 27, 2019 287

புதுடெல்லி (27 ஏப் 2019): புதிய 20 ரூபாய் நோட்டை மத்திய ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகப் படுத்தவுள்ளது.

ரூ. 100, ரூ.50, ரூ.20 ஆகிய நோட்டுகளில் புதிய வண்ணத்தில் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. அதன்படி ரூ.100, ரூ.50 புதிய நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் வெளியிட்டுவிட்டது.

இந்நிலையில் தற்போது ரூ.20 புதிய நோட்டையும் ரிசர்வ் வங்கி அச்சிட்டுள்ளது. வெளிர் மஞ்சள் நிறத்தில் இந்த நோட்டு உள்ளது. ஒரு பக்கம் மகாத்மா காந்தி படமும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திசாந்ததாஸ் கையெழுத்தும் இடம் பெற்றுள்ளது. இதில் தமிழ் உள்பட 15 மொழிகளில் 20 ரூபாய் என்று அச்சிடப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...