மோடியின் ஹெலிகாப்டரை நான் சோதனையிட உத்தரவிடவில்லை: ஐ.ஏ.எஸ் அதிகாரி முஹம்மது முஹ்சின்!

ஏப்ரல் 27, 2019 396

மும்பை (27 ஏப் 2019): பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்ததாக இடை நீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி முஹம்மது முஹ்சின் இருளில் போராடிக் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 17-ஆம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக ஒடிசா மாநிலம் சம்பல்பூர் வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்தினார். இதையடுத்து, விதிகளை மீறி முகமது மோசின் செயல்பட்டதாகக் கூறி, அவரைத் தேர்தல் ஆணையம் பணியிடை நீக்கம் செய்தது.

இதை எதிர்த்து முகமது மோசின் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கருப்பு பூனைப் படை பாதுகாப்பில் உள்ளவர்களின் வாகனங்களைச் சோதனையிடக் கூடாது என்று விதிகள் இல்லை என்றும், பிரதமரின் ஹெலிகாப்டரில் பெட்டிகள் இறக்கப்பட்டு வேறு வாகனத்துக்கு மாற்றப்பட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தது.

தேர்தல் நடக்கும் நேரத்தில், இது போன்ற தகவல் கிடைத்தால் யாராக இருந்தாலும் சோதனை மேற்கொள்ள வேண்டியது அதிகாரியின் கடமையெனக் குறிப்பிட்ட தீர்ப்பாயம், பணியிடை நீக்க உத்தரவுக்குத் தடைவிதித்தது.

இதற்கிடையே ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த முஹம்மது முஹ்சின், நான் இருளில் போராடிக் கொண்டு இருக்கிறேன். நான் தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படியே என் கடமையைச் செய்தேன். எந்த விதிமுறை மீறலும் நான் செய்யவில்லை. அதனால் என் மீது சுமத்தப்பட்ட குற்றத்தின் நகலை கேட்டுப் போராடிக் கொண்டு இருக்கிறேன்.

1996 முதல் நான் பணியில் உள்ளேன். என் மீது எந்த குற்ற கரையும் இல்லை. மேலும் மோடியின் ஹெலிகாப்டரை நான் நேரடியாக சோதனை இட உத்தரவிடவில்லை. மேலும் அந்த இடத்திலும் நான் இல்லை." என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி முஹம்மது முஹ்சின் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவும் முஹ்சின் தீர்மானித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...