நல்ல சகோதரன் என்றால் என்ன தெரியுமா? - பிரியங்கா காந்தியை கிண்டல் செய்த ராகுல் காந்தி!

ஏப்ரல் 28, 2019 447

கான்பூர் (28 ஏப் 2019): உத்திர பிரதேசத்தில் விமான நிலையத்தில் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் இருவேறு விமானங்களில் பயணம் மேற்கொண்டனர்.

அதற்கு முன்னர் விமான நிலையத்தில் இருவரும் தோல்களில் கை போட்டபடி அங்கிருந்த செய்தியாளரின் கேமிரா நோக்கி சென்றனர். அப்போது பேசிய ராகுல், ஒரு நல்ல சகோதரன் என்றால் என்ன தெரியுமா? என்று சிரித்து கொண்டே கேட்டார். தொடர்ந்து அவர், நான் அதிக தூரம் பயணம் செய்தாலும் சிறிய ரக விமானத்திலேயே பயணம் செய்கிறேன். ஆனால் என் சகோதரியோ குறைந்த தூரம் பயணம் செய்தாலும் பெரிய விமானத்தில் பயணம் செய்கிறார். இருந்தாலும் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.

அப்போது செல்லமாக ராகுலை தள்ளிவிட்டார் பிரியங்கா. மேலும் எப்போது திரும்பி வருவாய்? என்ற சகோதரியின் பாசத்தோடும் ராகுலை கேட்டார் பிரியங்கா.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...