இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து கேரளாவில் என்.ஐ.ஏ சோதனை!

ஏப்ரல் 28, 2019 297

காசர்கோடு (28 ஏப் 2019): இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து கேரள மாநிலத்தில் என்.ஐ.ஏ சோதனை மேற்கொண்டுள்ளது.

இலங்கையில் கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் நடத்தப் பட்ட தொடர் குண்டு வெடிப்பில் 250 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப் பட்டனர். 500 பேர் படுகாயம் அடைந்தனர்.

இச்சம்பவம் உலகையே அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில் இந்த தாக்குதலின் மூளையாக செயல்பட்ட சஹ்ரான் ஹாசிம் என்ற பயங்கரவாதி, கேரள மாநிலத்திற்கு வந்ததாகவும், அங்கு சிலருடன் தொடர்பில் இருந்ததாகவும் கேரள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே கேரளாவில் காசர் கோடு, ஆலுவா மற்றும் மலப்புரம் ஆகிய பகுதிகளில் என் ஐ ஏ சோதனை மேற்கொண்டுள்ளது. அங்கு சில ஆவணங்கள் சிக்கியதாகவும் கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை சம்பவம் தொடர்பாக இந்தியாவிலும் சோதனை மேற்கொள்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...