வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வீடுகள் கட்டி ஒப்படைப்பு!

ஏப்ரல் 29, 2019 260

கன்னூர் (29 ஏப் 2019): கேரளாவில் கடந்த வருடம் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்களுக்கு அகில இந்திய ஜமியத்துல் உலமா சார்பில் அறிவித்தபடி வீடுகள் கட்டி உரியவர்களிடம் ஒப்படைக்கப் பட்டன.

கடந்த வருடம் கேரளா மாநிலம் வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப் பட்டது. இதில் பல ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்தனர்.

இந்நிலையில் அகில இந்திய ஜமியத்துல் உலமா சார்பில் பாதிக்கப் பட்டவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என அறிவிக்கப் பட்டது. அதன்படி தற்போது 40 வீடுகள் முதல் கட்டமாக கட்டி உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி கேரள மாநிலம் கன்னூரில் நடைபெற்றது. இதில் மவுலானா செய்யது அர்ஷன் மதானி கலந்து கொண்டு வீடுகளை ஒப்படைத்தார். மேலும் 26 வீடுகள் கட்டுமனப் பணிகள் முடிந்ததும் உரியவர்களுக்கு ஒப்படைக்கப்படும் என்று ஜமியத்துல் உலமா தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...