மற்றும் ஒரு மலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி தேர்தலில் போட்டி!

ஏப்ரல் 29, 2019 443

லக்னோ (29 ஏப் 2019): சாத்வி பிரக்யா சிங் தாகூரை தொடர்ந்து மற்றும் ஒரு மலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி தேர்தலில் போட்டியிடுகிறார்.

மகாராஷ்டிரா மாநிலம் மலேகானில் கடந்த 2008 செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்பில் இந்துத்வா பயங்கரவாதிகளுக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப் பட்டது. அதில் ஒருவரன சாத்வி பிரக்யா சிங் குற்றவாளி என நிரூபிக்கப் பட்டு 10 ஆண்டு சிறையில் இருந்தார். பின் பிரக்யா சிங் ஜாமீனில் விடுதலையாகி பாஜகவில் இணைந்தார். மேலும் அவர் மத்திய பிரதேசத்தில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் மலேகான் குண்டு வெடிப்பில் மூளையாக செயல் பட்ட இன்னொரு குற்றவாளி மேஜர் ரமேஷ் உபத்ஹயாய், அகில பாரத் இந்து மகா சபா சார்பில் உத்திர பிரதேசம் பல்லியா தொகுதியில் போட்டியிடுகிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...