அதி தீவிர புயலாக மாறியது ஃபானி புயல்!

ஏப்ரல் 30, 2019 314

புதுடெல்லி (30 ஏப் 2019): வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபானி புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் நேற்று தீவிர புயலாக வலுப்பெற்று இன்று அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.

புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 690 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், அடுத்த 36 மணி நேரத்தில் இந்த புயல் மிகவும் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகரும் என்றும், ஒடிசா கடற்கரையை புயல் நெருங்கக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் காரணமாக ஒடிசா பகுதியில் கடற்படை உள்பட மீட்பு படையினா் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா். அரசு அலுவலா்களும் புயலை எதிர் கொள்வது தொடா்பாக தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனா்.

முன்னதாக சென்னைக்கும் ஆந்திராவுக்கும் இடையே ஃபானி புயல் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது அது திசை மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...