முஸ்லிம் முதியவர் போலீஸ் கஸ்டடியில் அடித்துக் கொலை!

மே 01, 2019 534

ஜெய்ப்பூர் (01 மே 2019): ராஜஸ்தானில் முஸ்லிம் முதியவர் ஒருவர் போலீஸ் கஸ்டடியில் அடித்துக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

ராஜஸ்தான் கோட்டா பகுதியைச் சேர்ந்த முஹம்மது ரம்ஜான் என்ற 52 வயது முதியவர் சொத்து விவகாரம் தொடர்பாக விசாரணைக்காக போலீசாரால் அழைத்துச் செல்லப் பட்டார். இந்நிலையில் போலீஸ் விசாரணையின் போது போலீஸ் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக ரம்ஜானின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ரம்ஜான் ஈரல் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் அவர் நல்ல உடல் நலத்துடனே இருந்துள்ளார். ஆனால் போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக போலீஸ் தாக்கியதில் உடல் நிலை மோசமானதை அடுத்து முஹம்மது ரம்ஜான் எஸ் எம் எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இவ்விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...