கஜாவை மிஞ்சும் ஃபானி புயலின் தாக்கம்!

மே 02, 2019 360

புதுடெல்லி (02 மே 2019): மணிக்கு 190 கி.மீ வேகத்தில் ஃபானி புயலின் காற்றின் வேகம் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஃபானி புயலின் காரணமாக வடகிழக்கு கடற்கரை பகுதியிலிருந்து ஆயிரக்கணக்காம்ன மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். ஃபானி புயல் ஒடிசாவை நோக்கி மணிக்கு 190 கி.மீ வேகத்தில் வீசும் காற்றுடன் நகர்ந்து கொண்டுள்ளது. வெள்ளிக்கிழமை ஒடிசாவில் கரையை கடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

தாழ்வான பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பகுதியில் உள்ள இரண்டு துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள் அதிகாரிகள்.

புயல் ஒடிசாவை நோக்கி நகர்ந்தாலும், ஆந்திரம் மற்றும் தமிழகத்திற்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...