மோடி, அமித்ஷா விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மே 02, 2019 320

புதுடெல்லி (02 மே 2019): பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் அமித்ஷா ஆகியோர் மீதான தேர்தல் விதி மீறல் புகாரில் வரும் மே.6 ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மோடி மீது தேர்தல் விதிமீறல் தொடர்பாக காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. எனவே இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என காங்., தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதன் மீதான விசாரணை இன்று நடந்தது. வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் ; மோடி மீதான புகார் தொடர்பாக வரும் மே.6ம் தேதிக்குள் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...