விவசாயிகளுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்றது பெப்ஸி குளிர்பான நிறுவனம்!

மே 03, 2019 218

அஹமதாபாத் (02 மே 2019): விவசாயிகளுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது பெப்ஸி குளிர்பான நிறுவனம்.

குஜராத்தைச் சேர்ந்த ஒன்பது விவசாயிகள் மீது குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள நீதிமன்றத்தில் பெப்சி இந்தியா நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கில், ‘எங்கள் நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ள எஃப் 5 ரக உருளைக் கிழங்குகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். அவர்கள், தலா 10 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கவேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தனர்.

இந்நிலையில் பெப்சி நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டிலும் பெப்சி நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், விவசாயிகள் மீது தொடர்ந்த வழக்கை திரும்பப் பெறுவோம் என்று பெப்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...