முஸ்லிம் பெண்கள் முகத்திரை உடைகளுக்கு தடை விதிக்க முஸ்லிம் கல்வி அமைப்பு ஆதரவு!

மே 03, 2019 502

திருவனந்தபுரம் (03 மே 2019): முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை விதித்து கேரள முஸ்லிம் கல்வி அமைப்பு உத்தரவிட்டுள்ளது

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவில் பல இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக கேரளாவில் ஐ எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக சிலர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இந்நிலையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு இலங்கை அரசு தடை விதித்தது. இதேபோன்று கேரளாவிலும் அதற்கான தடை வரவுள்ள நிலையில் The Muslim Educational Society (MES) in Kerala, அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் அவ்வமைப்பு முஸ்லிம் மாணவிகள் முகத்திரை மறைப்பதற்கு தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள சுற்றறிகையில், அரசின் உத்தரவை நாம் பின்பற்ற வேண்டிய நேரம் இது. இஸ்லாத்தில் முகத்தை மறைக்கும் பழக்கம் இருந்ததில்லை. பிற்காலத்தில் வந்த சிலரே இதனை கொண்டு வந்துள்ளனர். என்று தெரிவித்துள்ளது

இதுகுறித்து கேரள உயர் கல்வி அமைச்சர் கேடி ஜலீல் கூறுகையில், மக்காவில் ஹஜ்ஜில் கூட பெண்கள் முகத்தை மறைப்பதில்லை. முகைத்தை மறைப்பது அவசியமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கேரள முஸ்லிம் கல்வி அமைப்பின் இந்த முடிவிற்கு பலரும் ஆதரவும் அதேவேளை எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...