ஒடிசாவுக்கு அனைத்து உதவிகளும் ரெடி - பிரதமர் அறிவிப்பு!

மே 04, 2019 133

புதுடெல்லி (04 மே 2019): ஒடிசாவை சூறையாடிய பானி புயலால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான பானி புயல் நேற்று கரையை கடந்தது. இதனால் கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. புயலால் சாலையோர மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மீட்பு நடவடிக்கைகளில் பேரிடர் மேலாண்மை குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஒடிசாவை சூறையாடிய பானி புயலால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், பானி புயலா ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் கேட்டறிந்தேன். பானி புயலால பாதிகப்பட்ட மக்களுக்கு ஒட்டுமொத்த நாடும் துணை நிற்கிறது.

ஒடிசா மாநிலத்தின் நிவாரண பணிகளுக்கு தேவையான ஒத்துழைப்பு, நிதிகளை மத்திய அரசு வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...