மிகப்பெரிய புயலை சமாளித்த ஒடிசா அரசு - குவியும் பாராட்டுக்கள்!

மே 04, 2019 452

புதுடெல்லி (04 மே 2019): கஜாவை விட மிகப்பெரிய புயலான ஃபானி புயலை சமாளித்த ஒடிசா அரசுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஒடிசாவில் கடந்த 43 ஆண்டுகளில் இதுபோன்ற வலுவான புயல் ஒன்று உருவாகி கடந்ததில்லை. மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஒடிசாவில் லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மேலும் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனி தீவுகளாக மாறியுள்ளது. எனினும் இவ்வளவு பெரிய புயலிலும் கூட அங்கு மனித மற்றும் கால்நடைகள் உயிரிழப்பு மிக குறைவு.

இது பற்றி கூறியுள்ள ஒடிசா மாநில முதல்வர், "24 மணி நேரத்தில் இரவோடு இரவாக 12 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். கஞ்சம் பகுதியிலிலிருந்து 3.2 லட்சம் பெரும், பூரியில் இருந்து 1.3 லட்சம் பெரும் வெளியேற்றப்பட்டனர். மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 9000 முகாம்கள் அமைக்கப்பட்டு 7000 இடங்களில் சமைக்கப்பட்டு உணவு மக்களுக்கு தரப்படுகிறது. இந்த மாபெரும் பணியில் 45,000 க்கும் அதிகமான தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதுவரை வந்துள்ள அறிக்கையின்படி இறப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது" என தெரிவித்துள்ளார். மிகப்பெரிய இந்த இயற்கை பேரழிவை திறமையாக கையாண்டதாக ஒடிசா அரசுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...