இந்திய ராணுவம் மோடியின் சொத்து கிடையாது - ராகுல் காந்தி!

மே 04, 2019 180

புதுடெல்லி (04 மே 2019): ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்படைகள் நரேந்திர மோடியின் தனிப்பட்ட சொத்துக்கள் கிடையாது. என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வேலைவாய்ப்பின்மையே தற்போதுள்ள பெரிய பிரச்சனை. இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் அளித்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்ற தவறிவிட்டார். ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்ற பெயரால் நாட்டின் பொருளாதாரத்தை மோடி சீரழித்து விட்டார்.

பயங்கரவாதியான மசூத் அசார் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அவரை பாகிஸ்தானுக்கு தப்ப விட்டது யார்? காங்கிரஸ் ஆட்சி அல்ல. அப்போது ஆட்சியில் இருந்தது பா.ஜ.க. காங்கிரஸ் கட்சி எந்த பயங்கரவாதியையும் பாகிஸ்தானுக்கு அனுப்பாது. அதை எப்போதும் நாங்கள் செய்யமாட்டோம்.

ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்படைகள் நரேந்திர மோடியின் தனிப்பட்ட சொத்துக்கள் கிடையாது. ஆனால் அவர் அப்படி நினைத்து வருகிறார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது துல்லிய தாக்குதல்களை நடத்தி இருக்காது என மோடி கூறியுள்ளதன் மூலம் அவர் காங்கிரசை அவமானப்படுத்தவில்லை, மாறாக ராணுவத்தினரை அவமானப்படுத்தி விட்டார் என குற்றம் சாட்டினார்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...