போர் முடிந்து விட்டது எனது தந்தை உங்களை காப்பாற்ற மாட்டார் - மோடிக்கு ராகுல் பதிலடி!

மே 05, 2019 492

புதுடெல்லி (05 மே 2019): ராஜீவ் காந்தியை தாக்கிப் பேசிய பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, எனது மதிப்பை சீர்குலைப்பதற்கே ராகுல் காந்தி ரஃபேல் ஊழல் விவகாரத்தில் என்னை குற்றம்சாட்டி வருகிறார்.

உங்கள் தந்தை, ராஜீவ் காந்தி நேர்மையானவர் என்று கூறப்பட்ட நிலையில் அவர் ஊழலில் நம்பர் ஒன்னாக மாறினார். 1980களில் காங்கிரஸ், ஆட்சியின் போது போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் ராஜீவ் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்று, ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. எனினும், இவ்வழக்கில் ராஜீவ் லஞ்சம் பெற்றார் என்பதற்கு எந்த ஆதரமும் இல்லை என நீதிமன்றம் கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "மோடிஜி அவர்களே போர் முடிந்து விட்டது. உங்கள் முன்வினை பயன் காத்திருக்கிறது. என் தந்தை பற்றிய கருத்து உங்களை காப்பாற்றது. அன்புடன் ராகுல்" என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...