டிக் டாக் வைரல் வீடியோ சர்ச்சை - டெல்லி ஜும்மா மசூதிக்குள் நுழைய தடை!

மே 06, 2019 615

புதுடெல்லி (06 மே 2019): டெல்லி ஜும்மா மசூதியில் டிக் டாக் வீடியோ எடுத்து வைரலாக்கியதை அடுத்து சுற்றுலா செல்பவர்களுக்கு ஜும்மா மசூதியில் நுழைய தடை விதிக்கப் பட்டுள்ளது.

ஜப்பானிய இளம் பெண்கள் சிலர் டெல்லி ஜும்மா மசூதியில் டிக்டாக் வீடியோ எடுத்து பரவ விட்டனர். இது வைரலானது. மேலும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் டெல்லி ஜும்மா மசூதி ஷாஹி இமாம செய்யது அஹமது புகாரி, இளைஞர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் சுற்றுலா வந்து பார்வையிடும் வெளிநாட்டினருக்கும் ஜும்மா மசூதியில் நுழைய தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...