உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

மே 06, 2019 243

புதுடெல்லி (06 மே 2019): உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை என அவரது முன்னாள் உதவியாளர் அளித்த புகாரை விசாரணை குழு தள்ளுபடி செய்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகாய் மீது சமீபத்தில் அவரது முன்னாள் பெண் உதவியாளர் பாலியல் புகார் தெரிவித்தார். இந்த புகாரை அவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அனைவருக்கும் அனுப்பி இருந்தார்.

இந்த பாலியல் குற்றச்சாட்டை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுத்தார். அதோடு இதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து 3 நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பாப்டே தலைமையிலான இந்த நீதிபதிகள் குழு கடந்த மாதம் 26-ந்தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறது. அப்போது இந்த வழக்கில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாலியல் புகார் அளித்த பெண் மற்றும் வக்கீல் ஒருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

அதை ஏற்று பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்திருந்த பெண் ஊழியர் மூன்று நாட்கள் விசாரணைக்கு ஆஜரானார். அதன் பின்னர் அவர் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை என விசாரணை குழு நேற்று அறிக்கை சமர்ப்பித்ததன் மூலம் அந்தப் பெண்ணின் புகாரை தள்ளுபடி செய்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...