வாக்காளர்களின் முடிவைக் கேட்டு விழி பிதுங்கிய ரிபப்ளிக் டிவி - வீடியோ!

மே 09, 2019 882

பாட்னா (09 மே 2019): வாக்குச் சாவடியில் வாக்களர்களிடம் பேட்டி எடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளது ரிபப்ளிக் டிவி.

பீகாரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச் சாவடியில் வாக்களர்களின் மன ஓட்டத்தை பேட்டியாக கேட்டார் ரிபப்ளிக் டிவி செய்தியாளர். ஆனால் அனைத்து வாக்களர்களும் மோடிக்கு எதிராகவே குரல் கொடுத்தனர். இதனை சற்றும் எதிர் பார்க்காத ரிபப்ளிக் டிவி ஒரு சமயத்தில் மைக்கை ஆஃப் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானது.

அதில் குறிப்பாக ஒரு வாக்காளர், " மோடி எங்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஸ்மார்ட் சிட்டி என்றெல்லாம் கதை அளந்தார். ஒன்றை கூட நிறைவேற்றவில்லை." என்று மோடியை கடுமையாக விமர்சித்தார். இதனை சற்றும் எதிர் பார்க்காத ரிபப்ளிக் டிவி ரிப்போர்ட்டர். பிகார் எதிர் கட்சி குறித்து கேள்வி கேட்டு திசை திருப்பினார். எனினும் வாக்காளர்கள் மோடியை விமர்சித்துப் பேசியதுதான் தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையே எக்ஸிட் போல் விவகாரங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ள நிலையில், ரிபப்ளிக் டிவி மட்டும் எப்படி வாக்காளர்களிடம் வாக்குச் சாவடியிலேயே பேட்டி எடுக்கலாம்.? என்று சக ஊடகவியலாளர்கள் ரிபப்ளிக் டிவியை விமர்சித்து வருகின்றனர்.

ஏற்கனவே பல விமர்சனங்களை சந்தித்துள்ள ரிபப்ளிக் டிவி இன்னொரு சர்ச்சையில் சிக்கி விழி பிதுங்கி நிற்கிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...