காங்கிரஸை விமர்சிக்க நினைத்து அசிங்கப் பட்ட மத்திய அமைச்சர்!

மே 10, 2019 516

போபால் (10 மே 2019): காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதாக கூறி அசிங்கப் பட்டுள்ளார் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி.

மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி (Smriti Irani), 'ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தபடி கடன்களை மாநில காங்கிரஸ் அரசு தள்ளுபடி செய்து விட்டதா' என்று கேட்டுள்ளார். இதற்கு ஆமாம் ஆமாம் என அங்கிருந்த மக்கள் கத்தியதால் அதிர்ச்சியும் அவமானமும் அடைந்தார் ஸ்மிரிதி இரானி.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோ ட்விட்டரில் ஷேர் செய்துள்ள மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி, பாஜகவினரின் பொய்களை மக்கள் உணரத் தொடங்கி விட்டனர் என்று கூறியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...