இரு பிரிவினரிடையே மோதல் - ஒருவர் பலி: ஊரடங்கு உத்தரவு அமுல்!

மே 11, 2019 406

திஸ்பூர் (11 மே 2019): அஸ்ஸாமில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப் பட்டுள்ளது.

அசாம் மாநிலம், ஹைலகண்டி நகரில் மசூதி அருகே மோட்டோர் சைக்கிள் நிறுத்தியதை அடுத்து இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது கலவரமாக மாறியது. இந்த மோதலில் 15 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த மோதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. துணை ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் பிரிவு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை இரவு 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்ட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...