பசியிலும் ஜொலித்த மனித நேயம்!

மே 11, 2019 553

கவுஹாத்தி (11 மே 2019): இந்து முதியவர் ஒருவருக்கு அவசர தேவையாக ரத்தம் தேவைப்பட நோன்பு வைத்திருந்த முஸ்லிம் இளைஞர் நோன்பை வைத்துக் கொண்டு ரத்த தானம் வழங்க முன்வந்த  சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது உலக முஸ்லிம்கள் ஒரு மாதம் ரம்ஜான் நோன்பிருந்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் கவுஹாத்தி மருத்துவமனையில் 50 வயது மதிக்கத் தக்க இந்து மதத்தை சேந்த முதியவர் ஒருவருக்கு அவசர அறுவை சிகிச்சைக்காக, அவசர தேவையாக ரத்தம் தேவைப் பட்டது. குடும்பத்தினர் பல இடங்களுக்கு அலைந்து இரண்டு யூனிட் ரத்தம் மட்டுமே கிடைத்தது.

மேலும் ஒரு யூனிட் ரத்தம் தேவைப் படவே, அறுவை சிகிச்சை நடைபெறும் மருத்துவமனையில் பணிபுரியும், தபாஷ் என்ற இந்து இளைஞர் நோயாளியின் ஒரே குரூப் ரத்தம் கொண்ட அவரது நண்பரான பனாவுல்லாஹ் அஹமது என்பவரை தொடர்பு கொண்டர்.

26 வயது அஹமது நோன்பு வைத்துக் கொண்டே ரத்த தானம் செய்ய முடிவு செய்தார். எனினும் முஸ்லிம் மதகுருமார்களிடம் இதுகுறித்து ஆலோசனை செய்தார் அஹமது. அவர்கள் அஹமதுவை ஊக்கப் படுத்தியதோடு, நோன்பு வைத்துக் கொண்டு ரத்த தானம் செய்தால் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் நோன்பை முறித்து விடும்படியும் அதற்கு பரிகாரமாக நோன்பு காலம் அல்லாத நாளில் நோன்பு பிடித்துக் கொள்ளும்படியும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதன்படி அவசர தேவைக்காக நோன்பை முறித்து ரத்த தானம் செய்தார் அஹமது. இவ்விவகாரம் பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...