சீக்கியர்களுக்கு பொங்கும் மோடி அவர்களே குஜராத் சம்பவத்துக்கு பதில் என்ன? - உவைசி சரமாரி கேள்வி!

மே 11, 2019 540

புதுடெல்லி (11 மே 2019): 2002 குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டபோது நீங்கள்தானே முதல்வர்? என்று மோடிக்கு அசாதுத்தீன் உவைசி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையில் ராஜீவ் காந்தியின் உத்தரவுதான் காரணம் என்று பிரதமர் மோடி தற்போது தேர்தல் பிரச்சாரங்களில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் மோடியின் சீக்கியர்கள் மீதான திடீர் பாசம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள AIMIM தலைவர் அசாதுத்தீன் உவைசி,"2002 குஜராத் கலவரத்தில் 2ஆயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் படுகொலை செய்யப் பட்டபோது நீங்கள்தானே குஜராத் முதல்வராக இருந்தீர்கள்?. பொதுமக்களின் உயிர்களை பாதுகாக்கத் தவறியது நீங்கள்தானே? இதற்கு என்ன பதில்?" என்று உவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...