சிறையில் ரம்ஜான் நோன்பிருக்கும் இந்து கைதிகள்!

மே 12, 2019 530

புதுடெல்லி (12 மே 2019): டெல்லி சிறையில் முஸ்லிம் கைதிகளுடன் சில இந்து கைதிகளும் ரம்ஜான் நோன்பு இருந்து வருகின்றனர்.

டெல்லியில் உள்ள திகார், ரோஹினி, மன்டோலி ஆகிய சிறைகளில் 16,665 கைதிகள் உள்ளனர். இவர்களில் 2,658 கைதிகள் இவ்வருடம் ரம்ஜான் நோன்பு இருந்து வருகின்றனர். அதில் 31 இந்து பெண் கைதிகளும் 12 ஆண் இந்து கைதிகளும் அடங்கும்.

இவர்களுக்கான உணவுகள் முறையாக ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இஃப்தர் நேர உணவாக, பழங்கள், ஜூஸ் வகைகளும் சிறை உணவகத்தில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...