காஷ்மீரில் புனித ரமலானில் அரங்கேறிய கொடூரம்!

மே 12, 2019 746

சம்பல் (12 மே 2019): காஷ்மீரில் புனித ரமலான் மாதத்தில் ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

காஷ்மீர் தெஹ்ராம் சம்பல் பகுதியில் 3 வயது சிறுமி கொடூரமாக வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார். இந்த கொடூரத்தை அரங்கேற்றியவன் 27 வயது தாஹிர் அஹமது மிர் என்று அடையாளம் காணப் பட்டுள்ளான்.

சிறுமி ரம்ஜான் நோன்பு என்பதால் தனது மாமாவுடன் அருகில் உள்ள மசூதிக்கு  நோன்பு திறக்க சென்றுள்ளார். அப்போது சிறுமியின் மாமாவுக்கு தெரியாமல் அப்பகுதியில் மெக்கானிக் வேலை செய்யும் தாஹிர் அஹமது மிர் என்பவன் சிறுமிக்கு சுவிங்கம் உள்ளிட்ட இனிப்பு வகைகளை கொடுத்து கடத்திச் சென்று அருகில் உள்ள பள்ளிக் கூடம் ஒன்றில் வைத்து வன்புணர்வு செய்துள்ளான். சிறுமியை காணாமல் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி அலைந்தபோது பள்ளிக் கூடத்தின் கழிப்பறையிலிருந்து சப்தம் கேட்டு கதவை திறந்து பார்த்துள்ளனர். அங்கு சிறுமி அலங்கோலமாக இருந்துள்ளார். மேலும் நடந்த சம்பவத்தை அவர் விவரித்துள்ளார். 

சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப் பட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே காஷ்மீரின் பல பகுதிகளில் சிறுமி வன்புணர்வு சம்பவத்திற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. சிறுமியின் பெற்றோர் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

காஷ்மீரில் ஆஷிஃபாவுக்கு நேர்ந்த கொடூரமாக இதனையும் கருத வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சிறுமி திரு குர்ஆன் வகுப்புகளை முறையாக கற்று வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...