1988 லேயே இமெயில் உபயோகப் படுத்தியுள்ளேன் - மோடி கொடுத்துள்ள அடுத்த அதிர்ச்சி!

மே 13, 2019 421

புதுடெல்லி (13 மே 2019): 1988 ஆம் ஆண்டே இமெயில் அனுப்பியதாகவும், டிஜிட்டல் கேமரா வாங்கியதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தொலைக் காட்சி பேட்டி ஒன்றில் பிரதமர் மோடி, புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தபோது வானிலை மோசமாக இருந்தது. எனினும் மேக மூட்டம் இருந்தால், நமது விமானங்கள் எதிரி நாடுகளின் ரேடாரில் சிக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளது என்று நான்தான் தாக்குதலுக்கு உத்தரவிட்டேன்" என்று கூறி சமூக வலைதளங்களில் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

இப்போது அடுத்த சர்ச்சையாக 1988 லேயே ஈ மெயில் உபயோகப் படுத்தியுள்ளேன் என்று கூறியுள்ளார். ஆனால் இந்தியாவில் 1995 ல்தான் ஈமெயில் வந்ததாக கூறப்படுகிறது. இதனையும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...