ஜெட் ஏர்வேய்ஸ் துணை CFO பதவி விலகல்!

மே 14, 2019 189

புதுடெல்லி (14 மே 2019): ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் துணை CFO அமித் அகர்வால் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸின் பங்குகளை ஏலத்தில் விற்கும் நடவடிக்கையை அந்நிறுவனத்திற்கு கடன் கொடுத்த வங்கிகள், மூலம் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் தற்போது தனிப்பட்ட காரணங்களுக்காக ஜெட் ஏர்வேசின் இணை தலைமைச் செயலதிகாரியும், தலைமை நிதி அதிகாரியுமான அமித் அகர்வால் பதவி விலகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் செயல்பாட்டை நிறுத்திய நாள் முதல் தற்போது வரை அந்நிறுவனத்தின் போர்டு உறுப்பினர்களும், முக்கிய அதிகாரிகளும் பதவி விலகுவது தொடர்கிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...