கோ பேக் அமித்ஷா - வன்முறையில் முடிந்த பேரணி!

மே 15, 2019 323

கொல்கத்தா (15 மே 2019): மேற்கு வங்கத்தில் நடந்த அமித்ஷா பேரணி வன்முறையில் முடிந்துள்ளது.

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை நடத்திய பேரணியில், திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அணிக்கும், பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

திரிணாமுல் காங்கிரஸின் மாணவர் அணியினருக்கும், அமித் ஷாவின் ஆதரவாளர்களுக்கும் இடையில் குழப்பம் ஏற்பட்டதால், மாறி மாறி கற்களையும், பாட்டில்களையும் எறியத் தொடங்கியுள்ளனர். சில பகுதியில் தீயும் எரியத் தொடங்கியுள்ளது.

இதனால், காவல்துறையினர் தடியடி நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதில் சிலர் காயமடைந்துள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணவர் அணியினர் கொல்கத்தா பல்கலைக்கழகத்திற்கு அருகில் கறுப்பு கொடியோடு நின்றிருந்தனர். காவல்துறையினர் முதலில் கறுப்பு கொடி காட்டுவதை தடுத்தனர். ஆனால், அமித் ஷா அங்கு வந்தவுடன், இந்த மாணவர்கள் கறுப்பு கொடிகளை காட்ட தொடங்கினர். இதன் காரணமான காவல்துறை தடியடி நடத்தினர். பாஜக ஆதரவாளர்களும் கற்களை எறிந்தனர். இதனால் வன்முறை தீவிரம் அடைந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...