இந்த விசயத்திலே பிரதமர் மோடியை பாராட்டலாம்!

மே 15, 2019 280

சென்னை (15 மே 2019): தீவிரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது என பிரதமர் மோடி கூறியது மிகச் சரியானது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெறுகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்னாள் சொன்னேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாத்ராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன் எனக் கூறினார்.

கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திலும், போலீஸ் நிலையங்களிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பிரதமர் மோடி பேட்டி அளிக்கையில், எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது. ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் நிச்சயம் அவர் இந்துவாக இருக்க முடியாது என கமல்ஹாசனின் பேச்சுக்கு பிரதமர் மோடி கருத்து தெரிவித்தார்.

இதற்கிடையே முஸ்லிம் தீவிரவாதம் என்று பரப்புரை செய்வோருக்கும் இது பொருந்தும் என்பதே பலரது கருத்தாக நிலவுகிறது. இஸ்லாத்திலும் தீவிரவாதம் இல்லை என்பதே உண்மை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...