நெருக்கடியான நேரத்தில் மனிதாபிமானத்திற்கு மற்றும் ஒரு எடுத்துக்காட்டான முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநரின் செயல்!

மே 16, 2019 452

ஹய்லாகன்டி (16 மே 2019): ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள பகுதியில் நெருக்கடியான நேரத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் பிரசவத்திற்கு உதவி புரிந்துள்ளார் முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநர்.

அஸ்ஸாம் மாநிலம் ஹய்லாகண்டியில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. இந்நிலையில் நந்திதா என்ற இந்து பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரது கணவர் ஆம்புலன்ஸுக்கு அழைத்தும் அது வரவில்லை. மேலும் அருகில் உள்ளோரும் உதவவில்லை.

இதனை அடுத்து தகவல் அறிந்த மக்பூல் என்ற முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநர் அவரது ஆட்டோ மூலம் நந்திதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நந்திதாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதற்கிடையே மக்பூலின் மனிதாபிமானமிக்க செயலை காவல்துறை துணை ஆணையர் கீர்த்தி ஜெல்லி பாராட்டியுள்ளார். மேலும் இதுபோன்ற பல மத நல்லிணக்க உதாரணங்கள் நம் நாட்டுக்கு அவசியம் என்றும் ஊடகங்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...